50 கோடி நஷ்டம்!! நயன்தாராவால் தலையில் துண்டைப்போட்ட ஓடிடி நிறுவனம்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்து பிஸியாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. திருமணத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் கணவர், இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வரும் நயன்தாரா பற்றிய சில நெகட்டிவ் கருத்துக்களும் எழுந்து வருகிறது.
தனுஷ் நானும் ரவுடி தான் பட காட்சி பிரச்சனை, மூக்குத்தி அம்மா 2 படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனை, லேடி சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளை அடுக்கடுக்காக சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்த பேட்டியொன்றில், நயன் தாரா நடித்திருந்த டெஸ்ட் திரைப்படம் 55 கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது.
ஆனால் டெஸ்ட் படத்துக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இதன்காரணமாக 50 கோடி ரூபாய் வரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.