வில்லனை பார்த்தால் பாவமாக இருக்கு! நயன்தாராவின் அந்த படத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூசட்டை!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து பல லட்ச ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் கதாநாயகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அவரும் அவரது வருங்கால கணவருமான விக்னேஷ் சிவன் தயாரித்து நடித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ல் ஓடிடிதளத்தில் வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியாக பயங்கர கருத்துக்களையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், படம் விமர்சன ரீதியாக தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் படத்தினை பற்றி விமர்சித்துள்ளார். படத்தின் வில்லன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்க வேண்டும். ஆனால் அவரை பார்த்தால் பாவமாக தான் இருக்கிறது என்று, நயன் தாராவின் கதாபாத்திரத்தினை கிண்டல் செய்தும் பேசியுள்ளது ரசிகர்களை கோபப்படுத்தி வருகிறது.