அம்மாவுக்கு பிடிக்காத அந்த விஷயத்தை மட்டும் நான் செய்யவேமாட்டேன்!! நடிகை ஜான்வி கபூர்..

Sridevi Janhvi Kapoor Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 15, 2024 08:30 AM GMT
Report

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ககூறப்படுகிறது.

அம்மாவுக்கு பிடிக்காத அந்த விஷயத்தை மட்டும் நான் செய்யவேமாட்டேன்!! நடிகை ஜான்வி கபூர்.. | Never Cut To Hair For Any Character Janhvi Kaoor

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பத்த வைக்கும்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. பாடல் மணிகே மகே இதே என்ற இலங்கை ஆல்பம் போன்று இருக்கிறது என்று கலாய்த்து வந்தனர்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் நீங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எதை, ஒரு போதும் செய்ய மாட்டீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜான்வி, தன் அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்யமாட்டேன். இதுவரை நான் நடித்த ரோல்களுக்கு மெனக்கெட்டதன் பலனாக, என் தோள்பட்டை இறங்கி இருக்கிறது.

அம்மாவுக்கு பிடிக்காத அந்த விஷயத்தை மட்டும் நான் செய்யவேமாட்டேன்!! நடிகை ஜான்வி கபூர்.. | Never Cut To Hair For Any Character Janhvi Kaoor

எலும்புகள் உடைந்துள்ளன. கைக்கால்களில் கீறல்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. அவ்வளவு கடின உழைப்பு தந்துள்ளேன். ஆனால், மொட்டை அடிப்பது மட்டும் நான் செய்யமாட்டேன். அப்படியொரு ரோலுக்காக ஆஸ்கர் போன்ற விருதுகள் கிடைக்கும் என்றாலும் மொட்டை மட்டும் அடிக்கமாட்டேன்.

தலைமுடியில் கை வைப்பதை மட்டும் நான் அனுமதிக்கவே மாட்டேன். என் நீளமான தலைமுடிக்காக என் அம்மா அத்தனை அக்கறை எடுத்திருக்கிறார். 4 நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் வைத்து மசேஜ் செய்வார். என் தலை முடி பற்றி முகுந்த பெருமை அவருக்கு இருந்தது.

அம்மாவுக்கு பிடிக்காத அந்த விஷயத்தை மட்டும் நான் செய்யவேமாட்டேன்!! நடிகை ஜான்வி கபூர்.. | Never Cut To Hair For Any Character Janhvi Kaoor

என்னுடைய முதல் படத்திற்காக தலைமுடியை சிறிது வெட்டியபோது அம்மா என் மீது கோபப்பட்டார். எந்த சூழலிலும் தலைமுடியை வெட்டக்கூடாது என்று கூறியதில் இருந்து என் தலைமீது மட்டும் கை வைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.