திரிஷா கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பிரபல நடிகை.. அடுத்த லேடிசூப்பர் ஸ்டார் ஆக போட்ட பிளான்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் புது படங்களில் கமிட்டாகாமல் கணவருடன் ஹனிமூனில் இருந்து வருகிறார்.
அடுத்த லேடி சூப்பர் ஸ்டாராக பல நடிகைகள் போட்டிப்போட்டு வந்த நிலையில் நடிகை திரிஷாவும் இதற்கான ஒரு கனவில் இருந்து வருகிறார். அப்படி நயன் தாராவுக்கு முன்பே கனவுக்கன்னியாக ஜொலித்து வந்த திரிஷா தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாக அனைவரது கவனத்தை ஈர்த்து பெரியளவில் பேசப்பட்டு வருகிறார். மேலும் விஜய்ய்யின் 67வது படத்தில் நடிக்க திரிஷா கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் திரிஷாவின் கனவாக இருந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட வேண்டும் என்பது தான்.
ஆனால் அதற்கு மண்ணை அள்ளிப்போட்டுள்ளார் பிரபல நடிகை. கிராமத்து லுக்கில் பல வெற்றிப்படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அந்த நடிகை.நயன் தாரா நடிக்க வேண்டிய படங்களில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடிக்கவிருக்கிறாராம்.
துர்கா உள்ளிட்ட பெண்களை மையப்படுத்திய கதைகளம் கொண்ட படங்களில் நடிக்கவுள்ளார். இப்படங்கள் தனக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த திரிஷாவுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். சத்தமே இல்லாமல் திரிஷாவின் கனவை பறித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.