இனி பிரச்சனை வேண்டாம்.. பயத்தில் நடிகை நிதி அகர்வால், என்ன ஆனது?
Tamil Cinema
Nidhhi Agerwal
Actress
By Bhavya
நிதி அகர்வால்
ரவி மோகனின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். சமீபத்தில், விஜயவாடாவில் ஒரு கடை திறப்பு விழா நடந்தது.
அதில் கலந்துகொள்ள சென்ற நிதி அகர்வால்; அரசுக்கு சொந்தமான வாகனத்தில் பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், விழா ஏற்பாட்டாளர்கள் தான் அவருக்கு அந்த வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று பின் அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த சர்ச்சைக்கு பின் நிதி அகர்வால் எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் தனது சொந்த காரிலேயே சென்று வருகிறாராம்.
என்ன ஆனது?
இது குறித்து அவரது நண்பர்கள் கேட்ட போது, " நமக்கு நேரம் சரியில்லை. எனவே புதிதாக எந்த பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் இப்போது மிகவும் உஷாராக இருக்கிறேன்" என்று புலம்பினாராம்.