இரவு பார்ட்டியால் மாறிய வாழ்க்கை! திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் சினேகா ஓப்பன் டாக்..

prasanna sneha virumbukiren starnight
By Edward Jun 05, 2021 03:00 PM GMT
Report
544 Shares

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பெயரை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிரபல முன்னணி நடிகை என்ற பெயர் பெறாவிட்டாலும் இவரது நடிப்பு பெரிதளவில் யாரையும் கவரவில்லை.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் பிடித்த நடிகைகளிலில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரம் இரண்டாம் கட்ட கதாநாயகியாகவே நடித்து வந்த சினேகா திருமணமனத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார். இரு குழந்தைகளுடன் நடிகர் பிரசன்னாவுடன் டிரெண்டிங் லிஸ்ட்டில் இருந்து வருகிறார் சினேகா.

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதால் தான் மாறியது என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அதாவது, ஒருமுறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சென்றாராம். அப்போது சினேகாவை பார்த்த பலரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி முதன் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்களாம்.

அப்படம் பெரிதாக வெற்றியாகவில்லை. இதையடுத்து தமிழில் விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்லவொரு அடையாளம் கிடைத்தது என்று கூறியுள்ளார் சினேகா.