30 வயதில் 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான சூப்பர் ஸ்டாரின் வாரிசு..மாப்பிள்ளை நடிகரா?

Marriage Tamil Actress Niharika Konidela
By Edward Dec 08, 2024 04:30 AM GMT
Report

நடிகை நிஹாரிகா

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கூறப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி நாகபாபுவின் மகளும் பிரபல நடிகையுமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கு மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடித்து வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார் நிஹாரிகா.

30 வயதில் 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான சூப்பர் ஸ்டாரின் வாரிசு..மாப்பிள்ளை நடிகரா? | Niharika Konidela Second Marriage With Actor

அதன்பின் 2020ல் சைதன்யா ஜொன்னலகடா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நிஹாரிகா. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டது.

2-ஆம் திருமணம்

இதனைதொடர்ந்து, எனக்கு தற்போது 30 வயது ஆகிறது. அதனால் ஒரு நல்லவர் கிடைத்தால் கண்டிப்பாக மறுமணம் செய்ய யோசிக்க தயாராக இருக்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் நடிகை நிஹாரிகா.

இந்நிலையில், நிஹாரிகா இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இருவரும் பல படங்களில் ஜோடியாக சுற்றி வருவதாகவும் செய்திகள் வெளியானது. விரைவில் அந்த நடிகருடன் நிஹாரிகா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியானது.