எனக்கு நல்லாவே தெரியும்!! நடிகையிடம் அசிங்கப்பட்ட விஜே பிரியங்கா..

Nikhila Vimal Viral Video Priyanka Deshpande Star Vijay Manimegalai
By Edward Sep 18, 2024 06:30 AM GMT
Report

சமுகவலைத்தளங்களில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் சம்பவம் தான் பிரியங்கா - மணிமேகலை பிரச்சனை. குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற பிரியங்கா காரணமாக இருப்பதை வைத்து பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

எனக்கு நல்லாவே தெரியும்!! நடிகையிடம் அசிங்கப்பட்ட விஜே பிரியங்கா.. | Nikila Vimal Gave Nose Cut To Vijay Tv Priyanka

நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு பிரியங்காவை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை நிகிலா விமல், பிரியங்காவை தக் லைஃப் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சில வாரங்களுக்கு முன் வெளியான வாழை படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகர்கள் பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மலையாள நடிகையான நிகிலா விமலிடம், விஜே பிரியங்கா மொக்கை வாங்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

எனக்கு நல்லாவே தெரியும்!! நடிகையிடம் அசிங்கப்பட்ட விஜே பிரியங்கா.. | Nikila Vimal Gave Nose Cut To Vijay Tv Priyanka

வந்தால் ஸ்டார்ட் மியூசிக் தான் வருவேன் என்று அடம்பிடித்து வந்தீர்கள் என்று விஜே பிரியங்கா தெரிவித்தார். உடனே கிடையவே கிடையாது என்று கூறியிருக்கிறார்.

மேலும் மலையாளத்தில் விஜே பிரியங்கா பேசியதை பார்த்த நிகிதா, எனக்கு தமிழ் நல்லா தெரியும் நீங்கள் சொல்ற மலையாளம் புரியவில்லை என்று தக் லைஃப் பதில் அளித்து விஜே பிரியங்காவை மூக்குடைத்துள்ளார்.