அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழா!! மரகத நெக்லஸில் ஜொலித்த நீடா அம்பானி...
டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், கடந்த 20 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பதவியேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பல நாட்டுத்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் உலகளவில் பிரபல தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அழைப்ப்பு விடுக்கப்பட்டது.
முகேஷ் அம்பானி தன் மனைவி நீடா அம்பானியுடன் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பதவியேற்புக்கு முன் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கெ.டி. வான்ஸ் வாஷிங்கடன் டிசியில் உணவு விருந்து அளிக்கப்பட்டது.
நீடா அம்பானி பட்டுச்சேலை
அந்த விருந்தியில் நீடா அம்பானியின் காஞ்சிபுரம் பட்டுச்சேலை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. புடவையில் காஞ்சிபுரத்தின் பழம்பெரும் வாய்ந்த கோயில்களின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்துள்ளது.
நீடா அம்பானி புடவையில் மயில், கோபுரங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றது. மேலும் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய டிசைன்கள் இடம்பெற்றும் தேசிய விருது பெற்ற கலைஞரான கிருஷ்ணமூர்த்தி தான் இந்த புடவையை வடிவமைத்திருக்கிறார்.
நெக்லஸ்
அத்துடன் நீடா அம்பானி 200 ஆண்டுகள் பழமையான ரூபி, வைரம், முத்து, மரகதம், உள்ளிட்ட கற்கள் இடம்பெற்ற நெக்லஸ்-ஐ அணிந்திருந்தார். அவரின் நெக்லஸை பார்த்து பலரும் வியந்து பார்த்துள்ளனர். தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.