மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகையுடன் கைகோர்க்கும் நித்திலன்.. யாருடன் தெரியுமா?
Vijay Sethupathi
Nayanthara
Tamil Actors
Maharaja
Nithilan Swaminathan
By Dhiviyarajan
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நித்திலன் சுவாமிநாதன்.
இப்படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் 50 படமான மகாராஜா படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் பான் இந்தியவை தாண்டி உலக அளவில் ரீச் ஆகிவிட்டது.
இதைத்தொடர்ந்து, நித்திலன் சுவாமிநாதன் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உலா வரும் நயன்தாரா வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த படத்திற்கு மகாராணி என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.