மறைந்த நடிகர் நிதிஷ் வீராவை சந்தித்த இயக்குநர் செல்வராகவன்! இதுதான் காரணம்!

asuran nithish veera puthupettai saanikayitham
By Edward May 21, 2021 05:25 PM GMT
Report

சினிமாத்துறை பிரபலங்கள் சமீபத்தில் கொரோனா வைரஸால் மரணமடைவது அதிகரித்து வருகிறது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் குணச்சித்திர நடிகர்களும் மரணமடைந்து வருகிறார்கள்.

அந்தவகையில், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தவர் நடிகர் நிதிஷ் வீரா. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்ச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு முன் உயிரிழ்ந்தார்.

முதன்முதலில் சினிமாவில் நிதிஷிற்கு பேர் வாங்கி கொடுத்த படம் புதுப்பேட்டை. செல்வராகவன் இயக்கத்தில் நடித்து இதையடுத்து போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்தில் நிதிஷ் வீரா நடித்துள்ளார்.

சமீபத்தில் உடல் நிலை சரியில்லாத போது இயக்குநர் செல்வராகவன் நிதிஷ் வீராவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது, அடுத்தடுத்த படங்களில் பணியாற்றலாம் என்று கூறியுள்ளார். ஆனால், அதன்பிறகு நிதிஷ் வீரா மரணமடைந்துள்ளார் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.