நடிகைகள் அதை செய்தால் அப்படி ஆக முடியாது!! வெளிப்படையாக பேசிய நித்யா மேனன்..

Dhanush Nithya Menen Thiruchitrambalam National Film Awards
By Edward Aug 20, 2024 12:30 PM GMT
Report

நடிகை நித்யா மேனன்

கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதினை பெற்றுள்ளார்.

நடிகைகள் அதை செய்தால் அப்படி ஆக முடியாது!! வெளிப்படையாக பேசிய நித்யா மேனன்.. | Nithya Menen About Winning National Award Not Easy

இந்நிலையில், நித்யா மேனன் நடிப்பிற்கு பதில் கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு தேசிய விருது ஏன் கொடுக்கவில்லை என்று பலர் கருத்துக்களை கூறி வந்தனர். நித்யா மேனன் மீது பல விமர்சனங்கள் சமுகவலைத்தளத்தில் எழுந்த நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுக்கும் விதமான ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் என் நடிப்பை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் இருக்கும்.

தேசிய விருது

ஆனால் அப்படி நான் நடித்ததற்கு பின் என் உழைப்பை புரிந்து கொண்ட தேர்வுக்குழுவினருக்கு நன்றி. ஒரு சிறந்த நடிகை என்பது எடை குறைப்பதாலோ, எடையை அதிகரிப்பதாலோ அல்லது செயற்கையாக தங்கள் உடலை மாற்றிக்கொள்வதோ கிடையாது.

நடிகைகள் அதை செய்தால் அப்படி ஆக முடியாது!! வெளிப்படையாக பேசிய நித்யா மேனன்.. | Nithya Menen About Winning National Award Not Easy

அதெல்லாம் நடிப்பில் ஒரு பகுதிதானே தவிர, முழுமையான நடிப்பு கிடையாது. அந்த ரோலுக்காக எப்படி நான் உழைத்து இருக்கிறேன் என்று எனக்கு தான் தெரியும். இந்த தேசிய விருது எனக்கு, பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ், தனுஷ் சார் உள்ளிட்ட நாள்வருக்கும் அடங்கும் என்றும் இதுவரை எந்த படத்திலும் நடிகருக்கு இணையான ரோலில் நான் நடித்ததில்லை என்றும் நித்யா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.