அசல் கோளாரு எனக்கு இப்படிப்பட்டவர் தான்.. பிக்பாஸ் வீட்டை வெளியேறியதும் நிவாஷினி கூறிய உண்மை..

Bigg Boss Asal Kolaar
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 40 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்தவாரம் கமல் ஹாசனால் நிவாஷினி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அசல் கோளாறு வீட்டைவிட்டு சென்றப்பின் அவரின் ஆட்டம் யாரும் அறியாததால் அவர் எவிக்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய நிவாஷினி ஒரு பேட்டியொன்றில் தனக்கும் அசல் கோளாறுக்கு இடையில் என்ன தொடர்பு என்ற உண்மை கூறியுள்ளார். அதில், அசல் கோளாறை பற்றி எனக்கு ஜோர்தாலே பாடல் மூலம் தான் தெரியும். நல்ல ஒரு நண்பர். குயின்ஸியுடன் கனெக்ட் ஆனப்பின் தான் அசல் கோளாறுடன் பேச ஆரம்பித்தேன்.

அசல் கோளாறு

அவரது ஸ்டோரியை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். எல்லோரிடமும் பேசுவார், அப்படி பேசும் போது குடும்பம் சிங்கபூர் வாழ்க்கை பற்றியும் தான் பேசி வந்தோம். எனக்காக பேசும் ஒரு தோல்க்கொடுக்கும் நண்பராக இருந்தார். அப்படி அவர் வெளியே போனதில் இருந்து நானும் குயின்ஸ்-யும் தனியாக இருக்கும் ஃபீல்லாக இருந்தது.

அவர் போனபோது நான் சாப்பிட கஷ்டப்பட்டு பின் மனநிலையை மாத்திக்கிட்டேன் என்று கூறியுள்ளார் நிவாஷினி. நான் ஒரு பொண்ணு அவர் ஒரு பையன் என்று பார்த்தார்கள். நான் சிங்கப்பூரில் இப்படியாக தான் பாலினம் பார்க்காமல் பழகுவோம் என தெரிவித்துள்ளார்.

Gallery