அங்க கூட்டிட்டு போய் அப்படி பண்ணாங்க! உண்மையை உடைத்த மதுரை நடிகை நிவேதா..

சினிமாவில் நுழைய நடிகைகளுக்கி பல இடங்களில் இருந்து தவறான நிலைக்கு தள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகிறது. அதேசமயம், நடிகைகளிடம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் போன்றோர் அத்துமீறுவது ஒன்றும் புதிதும் அல்ல.

அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள நிவேதா பெத்துராஜ் மீடு பிரச்சனையில் தானும் சிக்கியுள்ளதாக மறைமுகமாக கூறியுள்ளார். மதுரை பெண்ணாக பிறந்து துபாயின் வளர்ந்து மாடல் படிப்பினை முடித்து தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

ஒருமுறை மிகப்பெரிய பார்ட்டி ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அங்கே சென்றதாகவும், பார்ட்டியில் ஒரு பெரிய பிரபலம் தன்னை தவறான இடங்களில் தொட்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எப்போது போலவும் நடிகைகள் கூறுவதுபோல அந்த பிரபலம் யார் என்பதை மறைத்து விட்டார். சில படங்களில் மட்டும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் ஆரம்ப காலத்தில் அல்லது அக்கடதேசத்து சினிமாவில் இப்படியான தொந்தரவிற்கு ஆளாகி இருப்பார் என்று கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்