அம்மன் சீரியலில் நடித்திருக்கும் விஜய்யின் ரீல் தங்கை நிவேதா தாமஸ்! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலர் தற்போது இளம்நடிகைகளாக பிரபல்மாகி வருகிறார்கள். அந்தவகையில் மலையாள சினிமாவில் ஆரம்பித்து நடிகர் விஜய்யின் குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வந்தவர் நடிகை நிவேதா தாமஸ். பின்னர் தெலுங்கு சினிமாவில் ஜெண்டில்மேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிவேதா தாமஸ் மீண்டும் நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு முன்பே பிரபல தொலைக்காட்சி சேனலில் ராஜ ராஜேஸ்வரி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தற்போது அந்த சீரியலின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்