கோடிக்கணக்கில் சம்பளம்!! 35 வயதில் பணமில்லாமல் இறந்துகிடந்த பிரபல நடிகை..

Silk Smitha Anuradha Actress
By Jai Jun 08, 2026 04:02 AM GMT
Report

சினிமா நடிகைகள் திரைக்கு பின்னால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி சில நடிகைகள் இருக்கவே செய்தார்கள்.

அந்தவகையில் இந்திய சினிமாவில் முக்கியமான நடிகை அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டு இறந்திருக்கிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம்!! 35 வயதில் பணமில்லாமல் இறந்துகிடந்த பிரபல நடிகை.. | No One Loved Me Actress Died At 35 Age

விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா

அவர் தான் ஆந்திர மாநிலத்தில் பிறந்த விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா. 4வது வரை மட்டுமே படித்த விஜயலட்சுமி, 14 வயதில் இருக்கும் போது ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவரின் வயது குறித்து விஜயலட்சுமிக்கு சொல்லாமல் திருமணத்தை முடித்தனர். திருமணத்திற்கு பின் கொடுமைகள் அரங்கேறியது.

2 ஆண்டு திருமண வாழ்க்கையை சமாளித்த விஜயலட்சுமி வீட்டில் இருந்து தப்பி ஓடி சென்னைக்கு வந்தார். அப்போது அவரிடம் எந்த பணமும் இல்லை, வெறும் நம்பிக்கை மட்டும் தான் இருந்துள்ளது. சினிமா செட்டுகளில் மேக்கப் போடுவது, பாத்திரங்களை கழுவுவதுமான வேலையை செய்தார். 1979ல் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமாகிய விஜயலட்சுமிக்கு, அப்படத்தில் சில்க் என்ற பெயரிடப்பட்டது. அன்றில் இருந்து தன் பெயரை சில்க் ஸ்மிதா என்று பெயரை மாற்றிக் கொண்டு, நடனத்திற்காகவே ஓடினார்.

கோடிக்கணக்கில் சம்பளம்!! 35 வயதில் பணமில்லாமல் இறந்துகிடந்த பிரபல நடிகை.. | No One Loved Me Actress Died At 35 Age

நடனத்திற்காக சில்க் ஸ்மிதாவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தார்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள். இந்திய மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்தார் சில்க் ஸ்மிதா. 1983ல் மட்டுமே 44 படங்களில் நடித்தார். திரையில் ஜொலித்தவருக்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி. குறுகிய நட்பு வட்டாரத்தை கொண்ட சில்க், கரியரின் உச்சத்தில் இருக்கும்போது, மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

தான் சம்பாதித்த பணத்தை படங்களை தயாரிப்பதில் முதலீடு செய்து தோல்வியை சந்தித்தார். இதனால் அனைத்து பணத்தையும் இழந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இருளாக அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

கோடிக்கணக்கில் சம்பளம்!! 35 வயதில் பணமில்லாமல் இறந்துகிடந்த பிரபல நடிகை.. | No One Loved Me Actress Died At 35 Age

1996 செப்டம்பர் 22 ஆம் தேதி நடிகை அனுராதாவுக்கு கால் செய்து ஏதோ ஒன்று தொந்தரவு செய்வதாகவும், அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்றும் சில்க் கூறினார் என்று அனுராதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அடுத்தநாள் தன் குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு சில்க் ஸ்மிதாவை வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். ஆனால் சில்க் அங்கு பிணமாக கிடந்துள்ளார். இறுதிக் கடிதம் ஒன்று அந்த அறையில் இருந்ததில், நடிகையாவதற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டும் தெரியும், யாருமே என்னை நேசிக்கவில்லை, எல்லோரும் சுரண்டவே செய்தார்கள் என்று எழுதியிருந்தார். 35 வயதில் மண்ணைவிட்டு மறைந்த விவகாரம் இன்றும் மர்மமாகவே தொடர்கிறது.