அந்தமாதிரி காட்சிகளுக்கு இனி வாய்ப்பே இல்லை! திருமணமான பல ஆண்டுகளுக்கு பின் காட்டமாக கூறிய நடிகை சமந்தா..

director flim cine
By Jon Jan 21, 2021 05:26 PM GMT
Report

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானாலும் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் தென்னிந்திய சினிமாவில் வளம் வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து அனைத்துவித கதைகளத்திலும் நடித்து வருகிறார். தற்போது, நான் இனிமேல் கவர்ச்சிக்கு இடம் கொடுக்கமாட்டேன் நடிக்கவும் மாட்டேன் என்று காட்டமாக கூறியுள்ளார் சமந்தா.

அவர் கூறியது, நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றம் இருக்கும்.

படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும். இயக்குனர், கேமராமேன் ஏதாவது சொன்னால் பதற்றம் இன்னும் உச்சத்துக்கு போய் விடும். ஆனால் அதை நான் எப்போதும் வெளியில் காட்டிக்கொண்டதில்லை.

10 வருட சினிமா வழ்க்கையில் இனிமேல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல கதையில் நடிக்க முடிவு எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். நீங்கள் சினிமாவில் நடித்தாலே போதும் என்று ரசிகர்கள் அவர் கூறியதற்கு கருத்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.