ஊருக்கு நண்பர்கள் வேஷம் போடும் விஜய் - அஜித்!! இதுதான் அவர்களின் உண்மையான முகம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகரால் அறிமுகமாகினார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாஸ் கலைஞராக திகழ்ந்து வருகிறார். ஆனால் நடிகர் அஜித் எந்தவொரு பேக்ரவுண்ட் இல்லாமல் அறிமுகமாகி தல, அல்டிமேட் ஸ்டார் என்ற பெயரை பெற்றும் கோடியில் சம்பளம் வாங்கும் மார்க்கெட் நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்து வருகிறார்.
ராஜாவின் பார்வையிலே
தற்போது அஜித், விஜய் இருவரும் தங்களின் சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்து விட்டுக்கொடுக்காமல் படங்களில் நடித்து வருகிறார். விஜய், அஜித் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். இந்த நட்பு இப்படத்திற்கு பிறகு எதிரிகளாக மாற்றிய படம் தான் நெருக்கு நேர். இயக்குனர் வசந்த் இப்படத்தில் அஜித்தை நடிக்க கேட்டபோது விஜய்யின் கதாபாத்திரத்தை எனக்கு கொடுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
விஜய் - அஜித்
அதன்பின் சூர்யா கமிட்டாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சமயத்தில் தான் அஜித், விஜய்க்கும் இடையில் மன கசப்பு உருவாக காரணமாக அமைந்தது. இதனை அடுத்து இருவரும் படங்களில் முன்பின் வெளியாவதில் வருடம் வருடம் நடைபெற்றது. அப்படி விஜய்யின் திருமலை, அஜித்தின் ஆஞ்சநேயா படங்கள் தான் இப்படியொரு பகை போரை உருவாக்கியது. அன்று முதல் இன்று வரை அஜித் - விஜய் ரசிகர்களின் பிளவும் போட்டியும் குறையாமல் வருகிறது.