கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை, ரசிப்பதும் தவறில்லை..நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்..

Rakul Preet Singh Bollywood Actress Ramayana
By Jai Oct 18, 2026 06:00 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்த ரகுல், அதன்பின்பும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை, ரசிப்பதும் தவறில்லை..நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்.. | Nothing Wrong With Acting Glamorous Rakul Preet S

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் திருமணத்திற்குப்பின் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை

அதில், சினிமாவில் பொதுவாக நடிகர்களுக்கு இருக்கும் சிறப்பம்சம் நடிகைகளுக்கு இல்லை. இங்கு நடிகர்கள் திருமணமாகி, குழந்தைகள் பெற்றும் ஹீரோவாக நடிக்கலாம், அது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால் போதும், உடனே அவ்வளவுதான் என்று பேச்சு கிளம்பிவிடும். அதுவும் நடிகைகளுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டால், மார்க்கெட் காலி என்று தம்பட்டம் அடிப்பார்கள்.

கவர்ச்சியாக நடிப்பது தவறில்லை, ரசிப்பதும் தவறில்லை..நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்.. | Nothing Wrong With Acting Glamorous Rakul Preet S

இந்த நிலை மாற வேண்டும், வாழ்க்கையில் திருமணமும் இரு அங்கம் தான், அது நடிககளுக்கு எந்தவகையில் தடைபோட முடியாது. நடிகைகளின் திறமைகளுக்கு வேகத்தடையாக அமைந்துவிடாது. திருமணத்திற்குப்பின் கவர்ச்சி காட்டக்கூடாது என்ற சட்டம் இல்லை. நடிகைகளின் திறமையை யாரும் தடுத்து விடமுடியாது. கவர்ச்சியை ரசிப்பது தவறு இல்லை.

இன்னும் சொல்லப்போனால் கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பரிமாணம் தான். அதுவும் ஒருவகையான நடிப்புதான். அதில் குறை கண்டுபிடிப்பது தவறு. கவர்ச்சியாக நடிப்பதில் தவறு கிடையாது, ஆனால் கவர்ச்சி என்பது எல்லைத்தாண்டி விடக்கூடாது, அதுதான் முக்கியம்.

நான் அதில் மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருக்கிறேன், எனவே எந்த விமர்சனங்களும் என்னை எதுவும் செய்துவிட முடியாது. இங்கு யாரும், யாருக்கும் தடை போடவோ, அளவீடு நிர்ணயம் செய்யவோ முடியாது, திறமை இருந்தால் நாம் போய்க்கொண்டே இருக்கலாம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.