விராட் கோலிக்கு எதிராக பேச பேரம் பேசினார்கள்!! ஜெர்மன் மாடல் அதிர்ச்சி தகவல்...
விராட் கோலி - லிஸ்லாஸ்
உலகளவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டவர்களில் விராட் கோலியும் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 273 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள விராட் கோலியை, ஜெர்மன் மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லிஸ்லாஸ் என்பவரும் ஃபாலோ செய்து வருகிறார்.

மாடல் லிஸ்லாஸின் பழைய பதிவினை விராட் கோலி லைக் செய்யப்பட்டதாக கூறி ஸ்கிரீன்ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகியது. கோலி அவரை பின் தொடராத நிலையில் இந்த லைக் எப்படி விழுந்திருக்கும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வந்தனர். 2025ல் இதே சர்ச்சை எழுந்தபோது தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேட்டியளித்த மாடல் லிஸ்லாஸ் ஒரு தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

பேரம் பேசினார்கள்
இந்த விவகாரம் வைரலானதை அடுத்து சில பத்திரிக்கையாளர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும் கோலி செய்யாத ஒரு விஷயத்தை செய்ததாக கூறி அவர் மீது அடுக்கடுக்கான பொய்க் குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைக்க வேண்டும் என்றும் அதற்காக பணம் தருவதாகவும் பேரம் பேசியதாக கூறியுள்ளார்.
ஆனால், விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் கோலியின் நற்பெயரை கெடுக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை என்ற திட்டவட்டமாக அந்த பேரத்தை மறுத்துவிட்டதாக லிஸ்லாஸ் தெரிவித்துள்ளார்.