இந்த விசயத்திலும் தோற்றுப்போன நயன்!! பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாரையே ஓரங்கட்டிய நடிகை சமந்தா!!

Nayanthara Samantha Alia Bhatt Deepika Padukone
By Edward Mar 22, 2023 02:00 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகளை கடந்துள்ளார். பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய சமந்தா முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார்.

ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி புதுவிதமான அவதாரத்தை எடுத்து மிரளவைக்கும் ரோல்களில் நடித்து வந்தார்.

இந்த விசயத்திலும் தோற்றுப்போன நயன்!! பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாரையே ஓரங்கட்டிய நடிகை சமந்தா!! | Ormax Most Popular Female Film Stars In India

இதற்கிடையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் சமந்தா. பல மாதங்களாக கடினமாக நடித்து முடித்து சாகுந்தலம் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

அப்படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா கிளாமர் லுக்கில் ஆளே மாறிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் பிரபல தனியார் ஊடகம் ஆர்மேக்ஸ் மீடியா மாதம் மாதம் வெளியிட்டு வரும் சினிமா பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தவரிசையில் இந்தியளவில் பிரபலமான நடிகைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஆலியா பட், தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகளை ஓரங்கட்டி நடிகை சமந்தா முதலிடத்தில் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்து, ஆலியா பட், தீபிகா படுகோனே 2ஆம், 3 ஆம் இடத்தினை பிடித்துள்ளனர். மேலும், நடிகை நயன் தாரா சற்றுப்பின்னடைவை சந்தித்து 4வது இடத்தினை பிடித்துள்ளார்.