உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

Aishwarya Rai Actress
By Kathick Oct 26, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

in Celebrity
Report

உலக அழகி பட்டம் வென்று அதன்பின் சினிமாவில் நடிக்க வந்தவர் ஐஸ்வர்யா ராய். இவருடைய அறிமுகம் தமிழ் சினிமாவில் இருந்தாலும், பாலிவுட் திரையுலகில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் பட்டையை கிளப்பி வந்த ஐஸ்வர்யா ராய் தமிழில் கதைக்களம் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ராவணன், ஜீன்ஸ், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் | Pakistan Business Women Looks Like Aishwarya Rai

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா எனும் மகள் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.

அந்த பெண்ணின் பெயர் கன்வால் சீமா. அவர் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் 'மை இம்பேக்ட் மீட்டர்' டிஜிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாராம். இவர் பார்ப்பதற்கு அப்படியே ஐஸ்வர்யா ராய் போல் இருப்பதால் இவரின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.


GalleryGallery