பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான் கண்கலங்கியது உண்மை..! மிகவும் உருக்கமாக கதிர் வெளியிட்ட பதிவு.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். மேலும் அண்ணன் தம்பி பாசத்தை கூறும் இந்த கதை அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், இந்த தொடரை பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள குமரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ஆம், " இன்று நான் நடித்துள்ள காட்சி எனக்கு மிகவும் நெருக்கமானது, கதிரின் கஷ்டம் மற்றும் கடையின் மீது அவன் வைத்திருக்கும் அன்பு குறித்து கூறும் காட்சி. நான் இந்த காட்சியை Method Acting மூலம் முயற்சி செய்தேன்" என கூறியிள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் நடித்த இந்த காட்சியை வித்தியாசமான முறையில் Glicerin ஏதும் போடாமல் தான் நடித்ததாகவும், ஏனென்றால் நான் கதிர் என்றும் இந்த காட்சியை என்னால் மறக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.