காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு என்ன ஆனது! உண்மையை உடைத்த தங்கை..

serial television pandianstores saravananvikram
By Edward Aug 11, 2021 06:11 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் அண்ணன் தம்பி பாசத்தை பற்றிய கதைகளத்தோடு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வரும் இந்த சீரியலில் சமீபத்தில் கண்ணன் காதலித்து வந்த ஐஸ்வர்யாவை கூட்டிச்சென்று கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார். குடும்பத்திற்கு தெரிந்து அவரை தலைமுழிகிவிட்டேன் நீ என் தம்பி இல்லை என்று கூறிவிடுகிறார்கள்.

சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். சமீபத்தில் இவர் பற்றிய தகவல் ஒன்றினை அவரது தங்கை சூர்யா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு நாள் திருமணம் முடிந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கிற்காக செல்லும் வழியில் விபத்து நேர்ந்துள்ளது. காயங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அந்தவலியுடன் நடித்துள்ளார்.

இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினருக்கு கூட தெரிவிக்காமல் முடித்து கொடுத்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் நடக்கமுடியாமல் இருந்தார். இதை நினைத்து நான் அவனை பார்த்து பெருமைபடுகிறேன் என்று கூறியுள்ளார்.

காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு என்ன ஆனது! உண்மையை உடைத்த தங்கை.. | Pandian Stores Kannan Met Accident While Shoot