அச்சுஅசலாக நயன்தாராவாக மாறிய முல்லை! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் வைரல் வீடியோ..

serial ladysuperstar nayanthara pandianstores netrikann
By Jai Aug 28, 2021 11:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னுள் ஆக்கிரமித்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் கண் தெரியாத சிபிசிஐடி அதிகாரியாக நெற்றிக்கண் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வந்தார். அப்படத்தில் ஒரு காட்சிகளில் நடித்தது மக்களிடையே பெரிய எதிர்ப்பார்பை கொடுத்தது.

அவரை போல் பலர் டஃப்ஸ் மேஷ் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா அறிவுமணி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அச்சு அசல் நடிகை நயன் தாராவை போல் மாறி அந்த காட்சியை அப்படியே பேசியது தற்போது வைரலாகி வருகிறது.