முந்தானையை கழட்ட மறுத்த 55 வயது நடிகை!! கோபத்தில் கன்னத்தில் பளார்விட்ட பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண்பாவம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சீதா. இப்படத்தினை அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நடிகை சீதா இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் நடித்த போது அவருடன் ஏற்பட்ட காதல் திருமணம் வரை சென்றது.
திருமணத்திற்கு குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சீதா சில காரணங்களால் பார்த்திபனை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தி திருமணத்தையும் முடித்து வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜன், சீதாவுடன் ஏற்பட்ட சில சம்பவத்தை பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், ஆண்பாவம் படத்தில், சீதா ஒரு காட்சியில், முந்தானையை விரித்து சுடுதண்ணீரில் விழுந்த வாட்ச்சை வெடிக்கட்டி எடுக்க வேண்டும். 200 அடி பிலிம் தான் இருக்கிறது, மழை வரப்போகும் என்பதால் சீக்கிரம் முடிக்கவேண்டியதாகிவிட்டது. ஆனால் என்னால் முந்தானை எல்லாம் விரிக்க முடியாது என்று சண்டைப்போட்டார். சரி பரவாயில்லை கீழ் முந்தானையை எடுத்து வெடிக்கட்டுங்கள் என்று கூறினேன்.
சீதாவிற்கு நடித்து முடித்து கேமராவை பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி ரெண்டு முறை அவர் செய்தபோது அவரை திட்டிவிட்டேன். அதன்பின் எடுத்த காட்சியில் முந்தானை நினைந்து போனதால் அதை மாற்றி திரும்பவும் நடித்தார். அதன்பின்னும் கேமராவை பார்க்க ஆரம்பித்ததால், எத்தனை முறை மறுபடியும் அதை செய்வீங்க என்று கையை நீட்டினேன். உடனே சீதா முன்னாடி வந்ததால் என் கை கன்னத்தில் பட்டு அறைந்த மாதிரியாகிவிட்டது.
உடனே சீதா அழுது கூச்சலிட்டதால் பரபரப்பாகிவிட்டது என்று பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும், எப்படியோ அந்த காட்சியெல்லாம் முடித்துவிட்டு டப்பிங்கிற்கு நான் தான் பேசிவேந்ன்னு வந்தாங்க. செட்டாகாது, வயலின் வாசிக்கிற பையன கூட்டிட்டி வந்து பேச வெச்சு, இவன் குரல் தான் உன் குரலுக்கு செட்டாகும். ஹீரோயின் குரல் உனக்கு செட்டாகாது என்று சொன்னதும் கோவிச்சுட்டு போய்ட்டாங்க.
அதன்பின் படம் ரெடியாகி ப்ரிவ்யூ பார்க்க நானும் எடிட்டரும் பார்த்தோம். இதை கேள்விப்பட்ட சீதா, அங்கயும் வந்து நானும் பார்ப்பேன் என்று அழுதேவிட்டார்கள். ஒருவழியா அவங்களை பார்க்க வைத்தப்பின், சீதா என் காலில் விழுந்து சாரி சார் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் என்று கூறினார்கள் என்று பாண்டியராஜன் கூறியுள்ளார்.