பராசக்தி பாருங்க..இல்லன்னா பகவந்த் கேசரி பாருஙக்...நடிகை ஸ்ரீலீலா பேச்சால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..
பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் பராசக்தி.
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று ஜனவரி 3 ஆம் தேதி சென்னையில் நடந்து முடிந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் இன்று 4 ஆம்தேதி ஓளிப்பரப்பாகவுள்ளது.

ஆடியோ லான்சில் நடிகை ஸ்ரீலீலா பேசியது தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீலீலா, பராசக்தி படம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது.
அனைவரும் வந்து அந்த படத்தில் என் நடிப்பை பாருங்கள், அப்படி அதில் பார்க்க முடியாவிட்டால், பகவந்த் கேசரி படத்தில் என்னுடைய நடிப்பை பாருங்கள். நான் எப்போதும் ஒரிஜினலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறியிருப்பதாக நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே ஜனநாயகன் படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறி வரும் நிலையில், ஸ்ரீலீலாவின் பேச்சு விஜய் ரசிகர்களை கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.