பராசக்தி எப்படி இருக்கு. சக்தி வாய்ந்த கேமியோ!! பட தயாரிப்பாளர் சொன்ன கதை ரகசியம்..
பராசக்தி படம்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பராசக்தி படம் வரும் ஜனவரி 10 ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் வெளியாகவுள்ள பராசக்தி படத்தின் ஆடியோ லான்ச் 2026 ஜனவரி 3 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா
இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்த பேட்டியொன்றில், இது முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை, இரு சகோதரர்கள் பற்றிய கதையாகவும் இது இருக்கும் என்று தெரிவித்தார் சுதா கொங்கரா. இப்படம் 60களில் நடப்பது மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
பீரியட் படம் என்பதால் பெரிய உழைப்பை படக்குழு போட்டியிருக்கிறார்கள். படத்தில் போடப்பட்ட செட்டுகள் எல்லாம் சென்னை வள்ளுவர் கோட்டத்துல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் வேர்ல்ட் ஆஃப் பராசக்தி என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில், பராசக்தி படம் பயங்கரமாக வந்திருக்கிறது.
இடைவேளை காட்சி பாட்ஷா மாதிரி இருக்கும். படத்தின் சிறப்பான காட்சிகளில் இதுவும் ஒன்று. ஷூட்டிங்கின் கடைசி 5 நாட்கள் தான் இந்த சீனை எடுத்தோம், படத்தில் சக்தி வாய்ந்த கேமியோ ஒன்றும் இருக்கிறது என்று ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருக்கிறார்.