வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுதே!! ஆணவத்தில் இயக்குனரை கதறவிடும் சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு பல ஆண்டுகள் கழித்து மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் சிம்பு பற்றிய பல அவதூறுகள் சொல்லிய வண்ணம் இருந்தது.
காதல் லீலைகள் முதல் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது என பல பிரச்சனைகளை கொடுத்ததால் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் புலம்பி வந்தனர். சொன்னபடி சொன்ன நேரத்தில் ஒரு படத்ஹ்டில் ஷூடிங்கை முடிக்காமல் இழுப்பது தான் சிம்புவின் ஸ்பெஷல் என்று பலர் அவர் பக்கமே செல்லாமல் இருந்து வந்தனர்.
தற்போது அப்படிப்பட்டவன் நானில்லை என்று சிம்பு படத்தின் ஷூட்டிங்கை முடித்து அதையெல்லாம் உடைத்தார். ஆனால் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுவது போல் மீண்டும் தன் ஆட்டத்தை ஆடி படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்து வருகிறாராம்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் என். கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்துள்ளார் சிம்பு. முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் மாதம் முழு ஷூட்டிங் முடிந்துள்ளது.
இப்படத்தில் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சிம்பு படத்தின் ஷூட்டிங்கை முடித்த அடுத்த நாளே பாங்காக் சென்றுவிட்டாராம். தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகவும் ஓய்விற்காகவும் அங்கு சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுகொண்டிருக்கிறாராம்.
பத்து தல படம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்த நிலையில் படத்தின் டப்பிங் இன்னும் நிறைவடையவில்லையாம். அதற்காக சிம்புவை இயக்குனரும் தயாரிப்பாளரும் இங்கே வர கூப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் சிம்பு நீங்கள் இங்கே வாருங்கள் என்னால் இப்போதைக்கு அங்கே வரமுடியாது என்றும் பாங்காக்கில் டப்பிங் கொடுத்து முடிக்கிறேன் என்று ஆணவத்துடன் பதிலளித்துள்ளாராம். இதனை பல சினிமா விமர்சகர்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.