முதல் கணவரை கொன்னுட்ட, அடுத்து அமீர் கொல்லப்போறிய?..நடிகை பாவனி ஓபன் டாக்!!
பாவனி ரெட்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பாவனி ரெட்டி.
தற்போது இவர் நடன கலைஞர் அமீருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகின்றார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாவனி, என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகமான அன்பை கொடுப்பேன். நான் என்னை பற்றி யோசிப்பதை காட்டிலும் அவர்களுக்காக தான் அதிகம் விஷயம் செய்வேன்.
என் முன்னாள் கணவர் தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டு, நான் அவரை கொலை செய்தேன் என்று கமெண்ட் செய்தார்கள். அதுக்கு நான் விளக்கம் கொடுக்க நினைத்தது இல்லை.
நான் அமீருடன் இருக்கும் போது கூட அடுத்து அமீரை கொலை செய்யப்போகிறீர்களா? என்று சிலர் கமெண்ட் செய்கிறார்கள். நானும் என்னுடைய முன்னாள் கணவரும் பல வருடங்கள் காதலித்தோம். எந்த மாதிரி அன்பை வெளிப்படுத்திக்கொண்டோம் என யாருக்கும் தெரியாது.
இந்த மாதிரியான விஷயங்களை பேசும் போது எனக்கு அழுகை வரும், பொது வெளியில் அழாமல் இருப்பேன் ஆனால் தனியா சென்று அழுதுவிட்டு வருவேன் என்று பாவனி எமோஷனலாக பேசியுள்ளார்.