10 ஆளுக்கு இருக்கும் எனர்ஜி..அதை செய்ய முடியாதுப்பா!! நரேஷ் பாபுவின் 4வது மனைவி ஓப்பன்
நரேஷ் பாபு
தெலுங்கு சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட நடிகர்களில் ஒருவர் நடிகை நரேஷ் பாபு. ஏற்கனவே மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை காதலித்து 60வது வயதில் 4வது திருமணம் செய்து கொண்டார். பல பிரச்சனைகளுக்கு பின் திருமணம் நடந்ததை அடுத்து பல விமர்சனங்களும் எழுந்தது. ஏற்கனவே நடிகை பவித்ரா லோகேஷ் திருமணமாகி விவாகரத்தானவர்.
பவித்ரா லோகேஷ்
இந்நிலையில், கணவர் நரேஷ் பாபுவின் பிறந்தநாள் விழாவில் பேசிய பவித்ரா லோகேஷ், மிகுந்த மரியாதை கொடுக்கக்கூடிய நபர். குரு மீது அவர் வைத்திருக்கும் மரியாதையை பார்த்து நான் வியந்துபோனேன்.
தினமும் 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு சாமி அறையில் பூஜை செய்துவிட்டு தான் அனைத்து வேலைகளிலும் தொடங்குவார். ஷூட்டிங் இருந்தாலும் இல்லை என்றாலும் தினமும் அதை தவறாமல் செய்துவிடுவார்.
தன் கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து விசயங்களையும் அவர் மெனக்கெட்டு செய்யக்கூடியவர். அவர் சாதாரண மனுஷனே இல்லை, அவருக்குள் 10 ஆட்களின் எனர்ஜி இருக்கிறது, என்னால் அதை செய்ய முடியாதுப்பா, எந்த வேலை எடுத்தாலும் அதை சரியாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது.
அதுதான் இவருடைய வெற்றிக்கு காரணம் என்று பவித்ரா தன் கணவர் பற்றி பேசியுள்ளார். அவரது பேச்சு இணையத்தில் டிரெண்ட்டாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
#PavitraLokesh SHOCKING Comment - #Naresh garu energy is Equal to 10 People in WORK and I Can’t Handle Him 😳😳😳😳😳pic.twitter.com/nFpSPDl6qV
— GetsCinema (@GetsCinema) January 20, 2025