என் வாழ்க்கையை வாழ விட்டிருக்கலாமே!! நடிகையிடம் அத்துமீறிய நடிகரின் 2ஆம் மனைவி புலம்பல்..
பவன் சிங் - அஞ்சலி
போஜ்புரியில் Saiya Seva Kare என்ற வெளியான பாடலை புரொமோட் செய்ய பவன் சிங் மற்றும் அஞ்சலி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது அஞ்சலி மேடையில் பேசிக்கொண்டிருந்த போது பவன் நடிகையிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அந்த வீடியோ வெளியாக, நடிகருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து போஜ்புரி சினிமாவை விட்டே விலகுகிறேன் என்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.
நடிகரின் 2ஆம் மனைவி
இந்நிலையில், நடிகரின் இரண்டாவது மனைவி நடிகரை மிகவும் மோசமாக விமர்சித்து அவரது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், நான் பவன் சிங்குடன் குடும்பம் மற்றும் அரசியல் தொடர்பாக பேச நினைக்கிறேன், ஆனால் அவரோ அவருடன் இருப்பவர்களோ என் அழைப்பை ஏற்பதில்லை. மெசேஜ்களுக்கும் பதிலளிப்பதில்லை. உங்களை சந்திக்க நான் லக்னோவுக்கு வந்தேன். ஆனால் அங்கு நீங்கள் என்னை சந்திக்க மறுத்துவிட்டீர்கள்.
என் அப்பா உங்களை சந்திக்க வந்தார், நீங்கள் அவரை மரியாதையாக கூட நடத்தவில்லை. நான் இவ்வளவு தண்டிக்கப்படுவதற்கு நான் என்ன தவறு செய்தேன், நான் உங்களுக்கு தகுதியற்றவள் என்றால் என்னை, என் வாழ்க்கையை வாழ விட்டிருக்கலாமே? அதைவிட்டுவிட்டு எனக்கு பொய்யான வாக்குறுதியை கொடுத்து என்னை இப்படி நடுவழியில் தவிக்கவிட என்ன காரணம்?.
நான் தற்கொலை செய்துக்கொள்ளலாம், ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன். என்னை நீங்கள் உங்கள் மனைவியாக நினைக்கவில்லை. உங்கள் மனைவியாக இருக்க நான் தகுதியானவள் இல்லை என்றால் என்மீது கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு இருங்கள்.
நான் இன்னும் உங்கள் குடும்பம் தான், என் சொந்த பிரச்சனையை சொன்னால் என் குடும்பம் என்னை நம்ப மறுக்கிறது. எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் இப்போது மிகவும் மோசமான சூழலில் இருக்கிறேன். அதனால் தான் நான் உங்களிடம் கடைசியாக ஒரு வாய்ப்பு கேட்கிறேன் என்று அந்த பதிவில் ஜோதி சிங் தெரிவித்திருக்கிறார்.