அஜித்துடன் எனக்கு பிரச்சனையா!! ஷாலினி மூலம் ஏகே செய்ததை உடைத்த பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் அஜித் பற்றி பல பிரபலங்கள் அவரது நல்ல குணத்தை பற்றி பகிர்ந்து வருவார்கள். அப்படி நடிகர் பொன்னம்பலம், சித்ரா லட்சுமணன் பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
அஜித், ஒரு சப்போர்ட் இல்லாமல் வந்தார். ஒருமுறை என் நண்பருக்கு பணம் தேவைப்பட்டது. அவர் பையனுக்கு உடம்பு சரியில்லை என்று என்னிடம் கேட்டார். 56 ஆயிரம் ஒருநாளில் தேவைப்பட்டதால், உடனே இதுபற்றி அஜித்திடம் கூறினேன்.
பணம் கட்டணும் என்று சொல்லிட்டு பல விசயங்களை கேட்டுவிட்டு ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். லன்ச் டைமில் சாப்பிட்ட போது, மாலை அஜித்திற்கு நியாபகப்படுத்தினேன்.
அப்போது என்னிடம், அண்ணே, 11 மணிக்கே ஷாலினி காசு கட்டிட்டாங்க என்று கூறினதும், நல்ல இருப்படா நீ, நீ சூப்பர் ஸ்டாரோ இல்லையோ, சூப்பர் ஸ்டாருக்கு மேல ஒரு பேர் இருக்கும்ன்னு அப்பவே சொன்னேன் என்று கூறியுள்ளார்.
இது இப்படி இருக்க எனக்கும் அஜித்துக்கும் பிரச்சனை, உதவி கேட்டேன்னு கட்டுக்கதையை கூறிட்டாங்க.
அவர் என்னை பார்க்காததற்கு அவர் அப்பா உடம்பு சரியில்லைன்னு தான் அதன்பின் எனக்கு தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.
பலருக்கும் தெரியாமல் அதுவும் மேக்கப் உதவியாளர்களுக்கு கூட வீடு வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கிறார்.