பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த கதாபாத்திரமா? லீக் செய்த குட்டி நடிகர்..

maniratnam ponniyin selvan aiswaryarai raghavanmurugan
By Edward Jul 29, 2021 09:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட சில படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த உலக அழகியாக வளம் வந்தவர்.

சமீபத்தில் திருமணமாகி குழந்தை பெற்றபின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தற்போது மீண்டும் இயக்குநர் மணிரத்னம் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வரும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் என்ன என்று தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சேதுபதி, மாரி 2, ரெக்க உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ராகவன் முருகன். பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சூட்டிங்கில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராயுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்துடன் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவர் பாண்டிய இளவரசி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.