ஹிந்தி நடிகருடன் காதலா பூஜா ஹெக்டே
மிஷ்கின் இயக்கத்தில் 2011 வெளியான "முகமுடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே.
அதற்க்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸி ஆகி இருந்தார். பின்னர் 12 வருடங்கள் கழித்து நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" படத்தின் கதாநாயகியாக மீண்டும் கோலிவுட்டில் களமிறங்கினார். ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது.
மீண்டும் தென்னிந்திய படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த பூஜா ஹெக்டே, பிரபாஸுடன் ராதே ஷாம் மற்றும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சர்யா படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை.

சமீபத்தில் இவர், "சர்க்கஸ்" என்னும் பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்துள்ளார். இது வரும் டிசம்பர் 22 திரையில் வெளியாகவுள்ளது அஜித் நடித்து வெளியாகி சூப்பர்ஹிட் ஆன "வீரம்" படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவுள்ளார் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
காதல் வலையில் பூஜாவா?
சமீபகாலமாக பூஜா மற்றும் சல்மான் கான் இருவரும் ஒன்றாக வலம் வருகிறார்கள் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி வருகிறது. விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என பல கிசுகிசு வெளியாகி வருகிறது.
இந்நிலையில், 56 வயதான சல்மான் கான் இதற்கு முன்பு பல கதாநாயகிகளை காதலித்துள் ளார். ஆனால் யாரையும் திருமணம் செய்யவில்லை. இந்த காதல் திருமணத்தில் முடியுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

அமெரிக்காவில் செட்டிலான நடிகர் நெப்போலியனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ