ராஷ்மிகாவின் காதலருடன் ஜோடியாக இணையும் பூஜா.. புதிய ஜோடி தான்
Vijay Deverakonda
Pooja Hegde
By Kathick
இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது அதிக சம்பளம் வாங்கும் சென்சேஷன் நடிகையாக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார்.
ஆம் தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்நிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா மற்றும் பூஜா முதல் முறையாக ஜோடியாக இணையும் இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.