3-வது முறையாக டாப் நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டே.. யார் அந்த ஹீரோ தெரியுமா?
Allu Arjun
Pooja Hegde
By Karthick Raja
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 கதாநாயகிகளில் ஒருவராகவும் வலம் வருபவர் பூஜா ஹெக்டே.
இவர் பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் இணைந்து DJ துவ்வாடா ஜகன்னாதம், அலா வைகுந்தபுரமுலூ என இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து AA23 திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் திரைப்படம் AA23. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
