நடிகர் விஜய்யால் ஏற்பட்ட தோல்வி.. தமிழ் இயக்குனருக்கு வலை வீசிய நடிகை பூஜா ஹெக்டே..
Pooja Hegde
By Karthick Raja
பூஜா ஹெக்டே முதன் முதலில் தமிழில் நடித்த திரைப்படம் முகமூடி. இப்படத்தின் தோல்வியின் காரணமாக தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார்.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் தான் தமிழில் நடித்தார்.
இப்படமும் மாபெரும் தோல்வியடைந்தது. வசூல் ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் கூட விமர்சன ரீதியாக இப்படம் தோல்வி என கருதப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் தோல்வியை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம் பூஜா.
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ள படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறாராம். இப்படத்தை தமிழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.