அசிங்கப்படுத்திய சூப்பர் ஸ்டார் நடிகர்!! ராசியில்லா நடிகை என முத்திரை போடப்பட்ட விஜய் பட நடிகை..
தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்று நடித்து வந்தார் பூஜா.
சமீபத்தில் பல படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீஎண்ட்டி கொடுத்தார். பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்த சமீபத்திய படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது.
இதனால் அவர் மீது ராசியில்லா நடிகை என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், சல்மான் கானுடன் ஜோடியாக நடித்த போது மகேஷ் பாபு நடிப்பில் GunturKaaram என்ற படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார்.
டிரி விக்ரம் இயக்கும் இப்படத்தில் இருந்து சமீபத்தில் இசையமைப்பாளர் எஸ் தமன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதில் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.
அதேபோல் GunturKaaram படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதில் நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே அப்படத்தில் இருந்து வெளியேறியதற்கு காரணம், சல்மான் கான் படம் தோல்வியை தழுவியது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டேட் பிரச்சனையால் தான் வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.