இரு நடிகைகளுக்கு ஏற்பட்ட தீராத பகை! அனிரூத்தால் இப்படியொரு மாற்றம்..

vijay samantha thalapathy anirudh poojahegde beast arabickuthu halamithi-habibo
By Jai Feb 18, 2022 06:56 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் சமந்தா, பூஜா ஹெக்டே. இருவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளாக தற்போது திகழ்ந்து வருகிறார்கள். சமீபகாலமாக இருவருக்கும் தீராத பகையாக இருந்து வருவதாக தென்னிந்திய வட்டாரத்தில் பேசப்பட்டது.

அதற்கு காரணம் சமந்தா அறிமுகமாவதற்கு முன்பே நடிகை பூஜா ஹெக்டே முகமூடி படத்தில் அறிமுகமாகி சீனியராகினார். அதன்பின் வின்னைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி மூலம் பிரபலமானார் சமந்தா. சில ஆண்டுகளுக்கு முன் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிரம் கணக்கு சிலரால் முடக்கப்பட்டது. பின் அதை மீண்டெடுத்திருந்தார் பூஜா.

இதனை வைத்து சமந்தா, சின்மயி, நந்தினி ரெட்டி ஆகியோ பூஜா ஹெக்டேவை விமர்சித்து கிண்டலடித்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இதனால் பூஜா ஹெக்டே படுமோசமான சமந்தாவை திட்டி வந்தனர். இது அமைதியாக இருக்கும் நிலையில் பூஜா ஹெக்டே ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இதற்கு போட்டியாகத்தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலை ஆட சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே விஜய்யிடன் ஜோடிப்போட்ட பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிரூத்தின் இப்பாடல் உலகம் முழுவதும் பரவி பலர் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். தன் கடமைக்கு பூஜா ஹெக்டேவும் HalamithiHabibo பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டார்.

இதற்கு மீண்டும் வெறுப்பேற்றும் விதமாக சமந்தா HalamithiHabibo பாடலை ரீல் செய்து வீடியோவை டிரெண்டாக்கினார். பூஜா ஹெக்டே உட்பட விஜய், அனிரூத், நெல்சன் ஆகியோரை அந்த பாடலுக்கு டேக் செய்திருந்தார் சமந்தா. பூஜா ஹெக்டே அந்த வீடியோவிற்கு 1.6 மில்லியன் லைக்ஸ் மட்டுமே வாங்கியுள்ளார். ஆனால் சமந்தா 14 மணி நேரத்தில் 2.2 மில்லியன் லைக்ஸை பெற்றுள்ளார். இதனால், படத்துல சமந்தாவையே ஜோடியாக போட்டிருக்கலாம் விஜய் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


GalleryGalleryGallery