நடிகை பூஜா ஹெக்டேவிடம் கேரவனில் எல்லை மீறி நடந்துகொண்ட பான் இந்தியன் ஹீரோ.. ஷாக்கிங் சம்பவம்
இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் அடுத்ததாக வெளிவரவிருக்கிறது.

இதை தவிர ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார். மேலும், DQ41 மற்றும் Hai Jawani Toh Ishq Hona Hai ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்திய நடிகையான பூஜா ஹெக்டே அளித்த பேட்டி ஒன்றில் பான் இந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் எல்லை மீறி நடந்துகொண்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை" என பூஜா கூறியுள்ளார்.