நிச்சயம் முடிந்தது காதலருடன் ஹனிமூனா.. சாய் பல்லவி தங்கச்சி எங்க போயிருக்காரு தெரியுமா..
Sai Pallavi
Wedding
Tamil Actress
By Jai
நடிகை சாய் பல்லவி தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் சமீபத்தில் தன் காதலர் வினீத் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
டாப் நடிகையாக திகழ்ந்து வரும் சாய் பல்லவி 31 வயதாகியும் திருமணம் செய்யாமல் நடித்து வரும் நிலையில் தங்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் தங்கை பூஜா கண்ணனின் நிச்சயத்தார்த்தத்தில் ஆட்டம் போட்டு கொண்டாடினார் சாய் பல்லவி.
இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை ஜப்பானில் உள்ள பனிப்படர்ந்த ஹொகாய்டோவுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துளார் பூஜா.
நிச்சயம் முடிந்து காதலர் தினத்தை முன்னிட்டு காதலருடன் சென்றிருப்பார் என்று பார்த்தால் தன் பெற்றோர்களுடன் தான் பூஜா ஜப்பான் சென்றிருக்கிறார்.