46 வயதான கமல் பட நடிகை பூஜா குமாரின் மகளா இது!! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்காவில் மிஸ் இந்தியா பட்டத்தை 1995ல் வென்று அதன்பின் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா குமார். 1997ல் காதல் ரோஜாவே என்ற படத்தில் கமிட்டாகினார். அப்படம் வெளியாக 3 ஆண்டுகள் காலதாமதம் ஆனது.
அதன்பின் 2000 ஆம் ஆண்டு படம் வெளியாகி அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுத்தரவில்லை. அதன்பின் மேஜிக் மேஜிக் 2டி என்ற படத்தில் நடித்தும் வரவேற்பு பெறாத பூஜா குமார் அமெரிக்காவிற்கு சென்று ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அமெரிக்காவில் செட்டிலாகியப்பின் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஜோடியாகவும் படு நெருக்கமாகவும் நடித்து ஷாக் கொடுத்தார்.
இதனால் இருவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது 2021-ல் விஷால் ஜோதி என்பவருடன் திருமணமாகிவிட்டதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது மூன்று வயதை எட்டிய அவரது மகளின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் பூஜா குமார்.