தமன்னாவின் காவாலா இருக்காது, ஆனால் என்ஜாய் செய்வார்கள்.. பூஜா ஹெக்டே சொன்ன ரகசியம்

Tamannaah Pooja Hegde Coolie
By Bhavya Apr 16, 2025 08:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ரெட்ரோ படம் வெளிவரவுள்ளது.

இப்படத்திலிருந்து வெளிவந்த பாடலுக்கு பூஜா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் போட்ட ஸ்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். பீஸ்ட் படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமன்னாவின் காவாலா இருக்காது, ஆனால் என்ஜாய் செய்வார்கள்.. பூஜா ஹெக்டே சொன்ன ரகசியம் | Pooja Open Talk About Her Role In Coolie

சொன்ன ரகசியம் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே கூலி படம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறேன்.

ரஜினிகாந்த் சார் உடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த படத்தில் நான் ஆடிய பாடல் தமன்னாவின் காவாலா பாடல் போன்று இருக்காது, முற்றிலும் வேறு விதமான வைபில் இருக்கும் நிச்சயம் ரசிகர்கள் இதை என்ஜாய் செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.    

தமன்னாவின் காவாலா இருக்காது, ஆனால் என்ஜாய் செய்வார்கள்.. பூஜா ஹெக்டே சொன்ன ரகசியம் | Pooja Open Talk About Her Role In Coolie