மகேஷ் பாபு பட இயக்குநர் மீது நடிகை பூனம் கவூர் பகீர் குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் டோலிவுட்..
Gossip Today
Tamil Actress
Actress
Hema Committee Report
By Jai
மலையாள சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் ஹேமா கமிட்டியின் அதிர்வலைகள் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.
சமீபத்தில் ஜானி மாஸ்டர் மீது பெண் ஒருவர் பாலியல் புகாரளித்து ஷாக் கொடுத்தார். அதன் பெயரில் ஜானி மாஸ்டர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக நடிகை பூனம் கவூர், ஜானி மாஸ்டரை இனிமேல் மாஸ்டர் என்று அழைக்கக்கூடாது என்றும் மாஸ்டர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் மீது கொடுத்த புகாரை தெலுங்கு நடிகர் சங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அப்படி நடந்திருந்தால் தானும் மற்றும் பலரும் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார் நடிகை பூனம் கவூர்.