32 வயதான பிரபல கவர்ச்சி நடிகை பூனம் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்

Actress
By Dhiviyarajan Feb 02, 2024 07:41 AM GMT
Report

பிரபல ஹிந்தி நடிகை பூனம் பாண்டே, சர்ச்சைக்கு பேர் போனவர். இவருக்கு வயது 32 தான். மாடலிங் துறையில் பிரபலமான பூனம், நஷா என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால், ஆடையின்றி மைதானத்தில் ஓடுவேன் என்று சொல்லி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

கடந்த 2021 -ம் ஆண்டு பூனம் பாண்டே, அவரது காதலர் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.

அந்த பதிவில் “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கின்றனர்.