எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் இருந்துச்சு!! பாக்யராஜ் மனைவி பூர்ணிமா எமோஷ்னல்..
திரைத்துறை மன்னனாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து தனக்கான ஒரு இடத்தினை பிடித்தவர் பாக்யராஜ். நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து இரு பிள்ளைகளை பெற்றார் பாக்யராஜ்.
பூர்ணிமா பாக்யராஜ்
சமீபத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில், எங்களுக்கு கஷ்டமே வந்ததில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வந்த கஷ்டம் போல யாருக்கும் வந்துவிடவே கூடாது என்றுதான் எப்போதும் நினைப்போம். அந்த கஷ்டம் வந்தபோது நாங்கள் நினைத்தது ஒன்றுதான்.
ஒரு குடும்பமாக இதனை கடந்துவிட வேண்டும் என்றும் கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை, நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
திருமணமான புதிதில் பெரியவர்கள் உடன் இருந்தால் சின்னசின்ன விஷயங்களை எப்படி கையாள்வது என்று சொல்லித்தருவார்கள். பெரியவர்கள் கூட இருப்பது ரொம்பவே அவசியமான ஒன்று என்று பூர்ணிமா எமோஷ்னலாக பேசியுள்ளார்.