சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணம்!! விஜய் பட நடிகை சங்கீதா ஓப்பன்..

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Oct 12, 2024 08:30 AM GMT
Report

சங்கீதா

90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சங்கீதா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹோம்லி ரூட்டை செட் செய்து பக்காவான ஹீரோயினாக திகழ்ந்த சங்கீதா, விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணம்!! விஜய் பட நடிகை சங்கீதா ஓப்பன்.. | Poove Unakkaga Actress Sangita Why Left Cinema

சமீபத்தில் தன்னுடைய காதல் கல்யாணத்தில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். நானும் என் கணவர் சரவணும்(சிலம்பாட்டம் பட இயக்குநர்) ஐ லவ் யூ என்று பிரப்போஸ் செய்தெல்லாம் எங்க காதலை வெளிப்படுத்தவில்லை.

பூவே உனக்காக படத்தில் வேலை செய்தப்பின் இரண்டு பேருக்கும் இடையில் ஒரு எமோஷ்னல் கனெக்ட் உருவாகியது. அப்படி ஒருத்தர் மீது ஒருத்தர் வெச்சிருந்த காதலை உணர்ந்து பின் திருமணம் செய்து கொண்டோம்.

வார்த்தைகளைக் காட்டிலும் இரு மனசும் ஒன்றிப்போறதுதானே காதல் என்று கூறியிருக்கிறார். நடிகை சங்கீதாவிற்கு 22 வயதில் திருமணமானது. அவருக்கு 22 வயதில் ஒரு மகள் இருக்கிறாராம். தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்த சங்கீதா திருமணத்திற்கு பின் சினிமாவைவிட்டு விலகிவிட்டார்.

அதன்பின் மக்ள் பிறந்ததும் குடும்பம் குழந்தை என்று வாழ்க்கையை பிஸியாக்கினார். தற்போது சென்னையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சி வாழ்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக கம்பேக் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் சங்கீதா.