வெளியேறிய கனிகா.. எதிர்நீச்சல் சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது இந்த நடிகைதான்..
Serials
Tamil TV Serials
By Karthick Raja
எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல். இந்த சீரியலில் நடிகை கனிகா ஈஸ்வரி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆனால், தனது தனிப்பட்ட காரணங்களால் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து கனிகா கடந்த ஆண்டு வெளியேறினார். இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
கனிகாவிற்கு பதிலாக வேறு எந்த நடிகை ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகை ஸ்ரீஜா இனி ஈஸ்வரியாக நடிக்கவிருக்கிறாராம். இவர் ஏற்கனவே பொம்மலாட்டம் என்கிற சீரியலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.