நடிகர் விஜய்யை சந்தித்து பிக் பாஸில் சர்ச்சையில் சிக்கிய பிரபலம்.. யாருனு தெரியுமா
தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இந்த நிலைமையில் அவர் சினிமாவிலிருந்து விலகுவது என்பது அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படம் இதுவரை உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலம் ஒருவர் நடிகர் விஜய்யை GOAT படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை இண்டிபெண்டெண்ட் பாடகர் நிக்சன் தான். கடந்த பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்கியவர் நிக்சன். சில சர்ச்சையில் சிக்கினாலும் அதன்பின் அதிலிருந்து வெளிவந்துவிட்டார்.
இந்த நிலையில், GOAT படத்தின் மட்ட பாடலின் படப்பிடிப்பின் போது விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் நிக்சன். அப்போது விஜய்யுடன் நிக்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.